தஞ்சாவூர், டிச.05-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், தன்னார்வலர்களுக்கு தீத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து சனிக்கிழமை அன்று பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா உத்தரவுப்படி, பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ஐ.செந்தூர்பாண்டியன் தலைமையில், உதயகுமார், சாதிக்அலி உள்ளிட்ட 10 தன்னார்வலர்களுக்கு, தீ விபத்து ஏற்படும் போது, எவ்வாறு செயல்படுவது, வெள்ளக் காலங்களில் மீட்புப் பணியில் ஈடுபடுவது, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது எவ்வாறு என்பது குறித்து அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் ராமச்சந்திரன், வீரர்கள் சரவணமூர்த்தி, மகேந்திரன், தனுஷ் ஆகியோர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் இயற்கை பேரிடரின் போது, அரசுத்துறையுடன் இணைந்து செயல்படுவர். 

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/