தஞ்சை பிப் 11, தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி அரியபுரம் கிராமத்தில் 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி கோவில் எதிர்புறம் உள்ள முல்லை நகரில் குடிசை வீடுகள் அதிகளவில் உள்ளன இரவு 8 மணி அளவில் திடீரென ஒரு குடிசை வீட்டில் தீ பிடித்தது.

அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென அருகில் இருந்த குடிசைகளுக்கு பரவியது இதனால் குடிசைகளில் வசித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர் ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்த பாபநாசம் கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இருப்பினும் சுமார் 10 குடிசை வீடுகள் மற்றும் குடிசைகளில் இருந்த பீரோ கட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் குடும்ப அட்டைகள் ஆதார் அட்டைகள் பள்ளி மற்றும் ஜாதி சான்றிதழ் உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தது.

இதன் மதிப்பு ரூபாய் சுமார் 5 லட்சம் என கூறப்படுகிறது இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் தாலுகா முருகன் துணை தாசில்தார் செந்தில்குமார் வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர் குடிசை வீட்டில் எப்படி தீப்பிடித்தது என தெரியவில்லை இதுகுறித்து பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு நடத்திவருகிறார்கள் தீயில் எரிந்து நாசம இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.