தஞ்சை ஏப்ரல் 22 மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பான தப்பிப்பது எப்படி என்பது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது தஞ்சை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு சாதனங்கள் முறையாக பராமரிப்பது குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு அறிக்கை விநியோகித்து வருகிறது.

இந்நிலையில் மாவட்ட அலுவலர் மனோகரன் உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் தீயணைப்பு வீரர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தில் தீ தடுப்பு சாதனம் பயன்பாடு பற்றிமருத்துவர கல்லூரிமருத்துவக்கல்லூரி பணியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதில் தீ விபத்து ஏற்பட்டால் தீ தடுப்பு சாதனங்கள் உதவியுடன் எவ்வாறு தீயை அணைத்து காப்பது சாதனத்தை முறையாக பராமரிப்பது எப்படி தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்து காண்பித்தனர் மேலும் உயரமான அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றுவது என்பது பற்றி உண்மையைப்போல் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.