தஞ்சை மே 18: திருவையாறு பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டு ஊரடங்கின் போது சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
திருவையாறு பகுதியில் துணை ஆட்சியர் (பயிற்சி) ஜஸ்வந்த்கண்ணன் தலைமையில் தாசில்தார் நெடுஞ்செழியன், சந்துரு, சாந்தி, மஞ்சு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் ஆகியோர் ஊரடங்கின் போது மக்கள் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த வகையில் திருவையாறு கடைவீதி, கண்டியூர், நடுக்கடை ஆகிய பகுதிகளில் இரண்டு சக்கரவாகனம், நான்கு சக்கர வாகனங்களில் வந்த பொதுமக்களை பிடித்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை செய்து எச்சரிக்கை செய்து அனுப்பினர். மேலும் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று அறிவுரை வழங்கினர்.
மேலும் தேவையில்லாமல் இரண்டு சக்கர வாகனங்களில் சுற்றியவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.