தஞ்சாவூர் ஆக :12 தஞ்சை மாநகரில் பள்ளிக்குச் செல்லாமல் இடைநின்ற இரண்டு மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் சேர்த்து நடவடிக்கை எடுத்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் இடைநின்ற பள்ளி மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க முதன்மை கல்வி அதிகாரி உஷா உத்தரவிட்டார் அதன்படி பள்ளி செல்ல மாணவர்கள் மற்றும் இடை நின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த 10ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தஞ்சை மாநகர வட்டார வள மையம் சார்பில் பள்ளி செல்லாத இடைநின்ற மாணவர்கள் கண்டறியும் பணி தஞ்சை மாநகரில் மேற்கொள்ளப்பட்ட மாவட்ட தகவல் சாதன அலுவலர் மார்ட்டின் மற்றும் தஞ்சை நகர வட்டார வள மைய மேற்பார்வையாளர் அனுசுயா, ஆசிரியர் பயிற்றுநர்கள் செந்தமிழ்ச்செல்வி, சிவக்குமார், நீலகிரி மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) ராஜேஸ்வரி ஆகியோர் இந்த பணிகளை மேற்கொண்டனர்.

அதன் படி தஞ்சை மாநகரில் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட போது தஞ்சை 39-வது வார்டு பகுதியில் ஒரு மாணவர் ஒன்பதாம் வகுப்புக்கு பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இடைநின்றது தெரியவந்தது.

இதேபோல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்றது தெரியவந்தது இதையடுத்து அந்த இரண்டு மாணவர்களை கண்டறிந்து அவர்களை அழைத்து பேசி பின்னர் இரண்டு மாணவர்களும் தஞ்சை முனிசிபல் காலனியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட னர் 2 மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/