தஞ்சாவூர் அக் 12: பாதுகாப்பு பணி…தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தப்பட்டு மீண்டும் கிடைத்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உதவி செய்வதாக கூறி ஒரு பெண் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்றார்.

கடத்தப்பட்டு குழந்தை மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சி மற்றும் செல்போன் எண்ணை வைத்து குழந்தையை கடத்திய பெண்ணை கைது கைது செய்ததோடு குழந்தையையும் 30 மணி நேரத்திற்குள்ளாக மீட்கப்பட்டது. இந்நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா உத்தரவின்பேரில் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகம் மற்றும் மகப்பேறு கால சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு வாயில் முன்பு பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேவையின்றி உள்ளே வருபவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதோடு வரக்கூடிய அனைவருடைய உடைமைகள் சோதனை செய்த பிறகே உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அனுமதி சீட்டு வைத்து உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்
http://thanjai.today/