தஞ்சாவூர் பிப்.5: தஞ்சையில் வருகிற 13-ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது தஞ்சை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பாரத் அறிவியல் கல்லூரி இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 13-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.

பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8:30 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறுகிறது இதில் சென்னை திருப்பூர் கோவை தஞ்சை கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர் இந்த முகாமில் ஐந்தாம் வகுப்பு முதல், பன்னிரண்டாம் வகுப்புவரை படித்தவர்கள் டிப்ளமோ ஐடிஐ பட்டதாரிகள் நர்சிங் மற்றும் எஞ்சினியரிங் தகுதிக்குரிய வேலை நாடுபவர்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளனர்.

விருப்பமுள்ளவர்கள் சுயவிவர அறிக்கை கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இருந்தால் அதற்கான சான்றிதழ் கூட கலந்து கொண்டு பயன்பெறலாம் முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை அளிப்போர் தங்களது சுய விவரங்களை வலைதளம் WWW.tnprivatejobs.tn.gov.in முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கும் கல்வித்தகுதி மற்றும் ஊதியம் போன்ற விவரத்தை pvtjobfairtnj@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு  o4362 237037  என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள மாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

செய்தி க.சசிகுமார், நிருபர்.
தஞ்சை