தஞ்சாவூர் டிச.26 -ஒரத்தநாட்டில் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 48 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரத்தநாடு நகர ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் நகர தலைவர் பேபி ரவிச்சந்திரன் தலைமையில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அருணகிரி நகர செயலாளர் ரஞ்சித் குமார் நகர இளைஞரணி தலைவர் செந்தில்குமார் நகர இளைஞரணி செயலாளர் ரமேஷ் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் மாநல் பரமசிவம் திருவோணம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சாமி அரசிளங்கோ ஆகியோர் முன்னிலையில் ஒரத்தநாடு ஒன்றிய பெருந்தலைவர் மானமிகு பார்வதி சிவசங்கர் அவர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
மற்றும் கழக தோழர்கள் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தனர் நிகழ்வில் ஒரத்தநாடு முன்னாள் பேரூர் கழக தலைவர் ஷேக் தாவூத் தங்கம் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் கண்ணன் புதூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழரசன் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மு கா கார்த்தி பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் ஒன்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் தலையாமங்கலம் துரைராஜ் மாவட்ட இளைஞரணி தலைவர் சுப்பிரமணியன்.
ஒன்றிய திராவிடர் கழக துணைச் செயலாளர் தெலுங்கன் குடிக்காடு பிரபு ஒன்றிய விவசாய அணி தலைவர் கக்கரக்கோட்டை மதியழகன் ஒரத்தநாடு இராவணன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் துறையாண்டார் கோட்டை அன்பரசு நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சக்கரவர்த்தி ஒன்றிய மாணவரணி தலைவர் பெரியார் எழிலன் மன் ராயன் குடிக்காடு மன்றோ மதியழகன் ஒக்கநாடு மேலையூர் கிளைக் கழக தலைவர் ஆ ராஜப்பா மையப்பகுதி செயலாளரை இலந்தை வெட்டி கந்தசாமி கண்ணை கிழக்கு கிளைக் கழக தலைவர் இரா செந்தில்குமார் தமிழன் தாளகம் ராஜேஷ் கேகே சன்ஸ் ஆனந்தன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/