தஞ்சையைச் சுற்றியுள்ள கண்டியூர், திருவையாறு, நடுக்காவேரி மேலத்திருப்பந்துருத்தி, மற்றும் திருவாலம்பொழில் இப்பகுதிகளில் பரங்கிக்காய்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

அந்த பரங்கிக்காய்கள் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன, ஆனால் தொடர் மழையின் காரணமாக வியாபாரிகள் பெரிதாக வராததால் விலை மிகவும் குறைத்து விற்கப்படுகிறது.

அதாவது கிலோ 3 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, இவ்வளவு குறைத்து விற்றாலும் அதை வாங்குவதற்கு வியாபாரிகள் வருவதில்லை, அது மட்டுமில்லாமல் தொடர்மழையால் வயல்களில் காய்கள் அழுகி கிடக்கிறது, இதனால் கடுமையான இழப்புகளை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள்.

இந்த தொடர்ச்சியான மழை உழவர்களின் வாழ்க்கையில் பெரும் இன்ன‍லை விதைத்து வருகின்றது.

செய்தி : ம.செந்தில்குமார்