வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தஞ்சையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய உழவர்கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது அது தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.

அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று உழவர்கள் போராட்டம் பனகல் கட்டிடம் முன்பு நடைபெறுவது என்று முடிவு செய்யப்பட்டது அதன்படி அங்கு பல்வேறு விவசாய இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

பந்தல் போட போலீசார் அனுமதிக்கவில்லை முதலில் நாற்காலி போட அனுமதிக்கவில்லை பின்பு விவசாயிகள் போராடி சிறிதளவு நாற்காலிகள் போட்டு அமர்ந்தனர் பெரும்பாலானோர் ஆங்காங்கே மர நிழலிலும் சாலை ஓரங்களிலும் இருந்து போராட்டத்தை நடத்தினர் சில சாலையின் குறுக்கே படுத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஒரத்தநாடு பாபநாசம் அய்யம்பேட்டை சேதுபாவாசத்திரம் இன்னும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் காத்திருப்பு போராட்டத்திற்கு டிராக்டர் முதலியவற்றில் வந்தனர் ஆனால் ஆங்காங்கே ஒவ்வொரு ஊரிலும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது அதையும் மீறி சிலர் முதன்மை சாலை வழியாக வராமல் கிராமங்களை சுற்றி சுற்றி வந்து தஞ்சை வந்து சேர்ந்தனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் சாலையில் அமர்ந்து உணவை எடுத்துக் கொண்டனர் இந்த போராட்டத்திற்கு சாதாரண போலீசார் மட்டுமல்லாமல் சிறப்பு அதிரடி படை வீரர்கள் கைகளில் தடிகள் கவச உடைகள் தலைக்கவசம் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது மாலை 5 மணி அளவில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் குடி தண்ணீர் இல்லாமல் அவதியுற்றனர் அதைப் பார்த்த போலீசார் அவர்களே தண்ணீர் பாட்டில்களை வாங்கி விவசாயிகளுக்கு விநியோகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

செய்தி ம.செந்தில்குமார்