இந்திய ஒன்றிய அரசு மூன்று வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது, இது உழவர்களுக்கு மட்டுமல்லாது சாமானியர்களையும் பாதிக்கும் சட்டங்கள் எனவும் சொல்கின்றார்கள்.
இந்த உழவர் மற்றும் மக்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல மாநிலங்களிலிருந்து உழவர்கள் டெல்லியை நோக்கி ஊர்வலமாகச் சென்று அந்த சட்டத்தை நீக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் இன்று இந்திய அளவில் முழு கடையடைப்பு நடைபெறுகிறது அதனால் பெரும்பாலான கடைகள் தஞ்சையில் மூடப்பட்டுள்ளன அத்தியாவசிய பொருட்களான பால் மருந்து கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.