தஞ்சாவூர் செப் 24 தஞ்சை மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரத்தின் வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு உழவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்தில் 8801 ஹக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. சில இடங்களில் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்கள் முழுவதும் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உத்தமர்குடி, புத்தூர், புளியங்குடி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக நெல்லைக் கொட்டி வைத்துக் கொண்டு கடந்த 10 தினங்களாக விவசாயிகள் பார்த்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அம்மாபேட்டை உள்ளிட்ட ஒன்றியம் முழுவதும் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை காலத்தோடு திறந்து விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இத்தகைய சூழ்நிலையில் அறுவடை இயந்திரத்தில் வாடகை என்பது ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 2500 அணைக்கப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

உழவர்களுக்கு வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக இருந்து வருகிறது. விவசாயிகளின் இடுபொருள் விலை உயர்ந்துள்ளது. அறுவடை இயந்திரத்தில் வாடகையும் கூடுதலாக உள்ளது. ஆனால் விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு விலை உயர்வு இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அறுவடை இயந்திரத்தின் வாடகை எவ்வளவு என விவசாயிகளுக்கு தீர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/