தஞ்சை ஏப்ரல் 21 தஞ்சை உர விலை உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை அரண்மனை முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் முடித்து வைத்தார். இதில் விவசாயிகள் சங்க தலைவர்கள் சாமு தர்மராஜன், செந்தில்குமார், கிருஷ்ணன், பாலு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.