தஞ்சை ஏப்ரல் 21 தஞ்சை நிலுவைத் தொகை ரூபாய் 100 கோடி வழங்க கோரி விவசாயிகள் கையில் கரும்பு வழி ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் தஞ்சாவூர் அருகே மருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் நுழைவுவாயில் முன்பு கரும்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தலைவர் ராமசாமி தலைமையில் பொது செயலாளர் திருப்பதி செயலாளர் கோவிந்தராஜ் ஒலித்த விவசாயிகள் கருங்குவளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் நடப்பாண்டு வெட்டிய கரும்பிற்கான பணம் 45 கோடி ரூபாய் வழங்கவில்லை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்த கணக்கை மாற்றி மத்திய கூட்டுறவு வங்கி கொண்டு சென்றதை மீண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைக்க வேண்டும், நடப்பாண்டு கரும்பு நடவு பதிவு செய்த விவசாயிகளுக்கு கடன் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 2016 2017 ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகையான ரூபாய் 3 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர், இந்த போராட்டத்திற்கு பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

‍செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை