தஞ்சை, பிப். 7: தஞ்சாவூர் அருகே மானோஜிபட்டி. வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சுமார் பல ஆயிரம் ஏக்கருக்கு மேல் தாளடி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தற்போது பயிர்கள் ஓரளவு வளர்ச்சி அடையும் நிலையை எட்டியுள்ளது. இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்யலாம் என்ற நிலை உள்ளது.

தற்போது கல்லணை கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பயிருக்காக திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தாளடி பயிர்கள் தண்ணீர் இல் லாமல் காய்ந்து கருகி வரு கிறது. இன்னும் இரண்டு வாரத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால் பயிர்க ளைக் காப்பாற்றி அறு வடை செய்து விடலாம் என்று விவசாயிகள் எதிர் வார்த்தனர்.

அறுவடைக்கு தயாராகும் நிலையில் தாளடி பயிர்கள் தண்ணீர் இல்லாமல் சாயும் நிலையில் உள்ளது. ஆனால் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள் ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் விவ சாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் றன. கூறுகையில், ஏற்கனவே கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் கள் கடுமையாக பாதிக் கப்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்து மறு நடவு செய்தோம்.

தற்போது தாளடி பயிர்கள் அறுவ டைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த நேரத்தில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத் தப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் காய்ந்து வருகின்றது விவசாயிகளின் நிலையை உணர்ந்து கல்லணையில் இருந்து அறுவடை முடியும் வரை யாவது தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/