தஞ்சாவூர் நவ. 21- மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார் விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக தஞ்சை காந்திஜி சாலையில் இருவின் பாலம் அருகே விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன் சாமி நடராஜன் வீரமகன் பாலசுந்தரம் காளியப்பன் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


பின்னர் அந்த வழியாக வந்த மக்களுக்கும் பேருந்துகளில் பயணம் செய்த பயணி களுக்கும் இருசக்கர வாகனங்களில் சென்ற அவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி மகேந்திரன் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிச்சாமி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் வடிவேலன், விவசாயிகள் மற்றும் சான்றோர் பெருமக்கள் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.

மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதை வரவேற்று. தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி முன்பு மாணவ, மாணவிகளும், இந்திய மாணவர் சங்கத்தினரும், பொதுமக்களும் , இனிப்பு வழங்கி கொண்டாடினர் இதற்கு மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமை தாங்கினார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/