தஞ்சை பிப் 06 மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர் அதிமுக மத்தியில் வேளாண்‍ சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, தமிழகத்தில் தேர்தலை கருத்தில் கொண்டு விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்து இரட்டை வேடம் போடுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.