தஞ்சை மே 15 கோடையில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து பயிறு நல்ல விலை கிடைப்பதால் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதிகளில் கோடை சாகுபடியாக உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள.
ஆண்டுதோறும் சம்பா தாளடி நெல் பயிர் சாகுபடி பிறகும் பரவலாக உளுந்து சாகுபடி செய்யப்படுவது வழக்கம், தஞ்சை மாவட்டம் பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதிகளில் சில இடங்களில் தென்னந் தோப்புகளில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்ட 70 நாட்களில் நான்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
தை மாசி பங்குனி சித்திரை பட்டங்களில் வம்பன்- 8 ஆடுதுறை -5 உள்ளிட்ட உளுந்து ரகங்கள் பரவலாக விளையாடப்படுகிறது தற்போது பயிரிடப்பட்ட உளுந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் உளுந்து காண குறைந்தபட்ச ஆதார விலையை ரூபாய் 60 ஆக நிர்ணயம் செய்தது ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்கள் இருந்து பயிர்களை விற்பனை செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந் நிலையில் வெளிச்சந்தை ரூபாய் 70 முதல் 90 வரை விலை போகிறது எனவே விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லாமல் தனியார் வியாபாரிகளிடம் விற்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர் தற்போது கோடை நெல் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து பயிருக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.