தஞ்ir: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பொங்கல் கரும்பு விளைவிக்கப்பட்டாலும் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விளைவிக்கப்படும் கரும்புக்கு தனி மவுசு உண்டு.

வளமான மண், காவிரி தண்ணீர், பாரம்பரியமான விவசாய முறைகள் என பல காரணங்களால் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பயிர் செய்யப்படும் பொங்கல் கரும்புக்கு தமிழ்நாடு முழுவதும் கிராக்கி உள்ளது. பொங்கல் கரும்பு பயிரிட சித்திரைப்பட்டம் உகந்தது என கருதப்படுகிறது. அதன்படி தற்போது திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கான விதைக் கரும்புகரணைகள் பாரம்பரிய விவசாயிகளிடம் இருந்து பெற்று, வயல்களை உழுது பண்படுத்தி பார் பிடித்து அதில் விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடுமையான வெயிலிலும் விதைக் கரணைகளை நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.