தஞ்சாவூர் சூலை 24: தஞ்சை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் இன்று ஜூலை 24 மற்றும் வரும் ஆகஸ்ட் 14 ஆகிய நாள்களில் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு ரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணியை மேற்கொள்ள ஏதுவாக அங்காடிகளுக்கு விடுமுறை நாள்களான மே 16, ஜூன் 4, 11 ஆம் தேதிகளில் வேலை நாள்களாக அறிவிக்கபட்டு, பணி மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு பதிலாக ஜூலை 17, 24, ஆகஸ்ட் 14 ஆம் தேதிகள் நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை நாள்களாக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு ஜூலை 24, ஆகஸ்ட் 14 ஆம் தேதிகள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால், இரு நாள்களிலும் நியாய விலைக் கடைகள் இயங்காது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/