தஞ்சாவூர் ஆக 11 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2021 22ஆம் கல்வியாண்டிற்கான பிஎட் எம்எட் நேரடி சேர்க்கைக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் பல்கலைக்கழகம் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை இலங்கை கல்வி இயல் பிஎட் மற்றும் கல்வி இயல் நிறைஞர் 2 ஆண்டு முழுநேர பட்டப்படிப்பிற்கான 2021 22 ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 57 2021 முதல் 68 2021 தேதி வரை நடைபெற்றது தற்போது 31 8 2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே பல்கலைக்கழக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் நேரிலும் தமிழ்ப் பல்கலைக்கழக இணைய வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்திலும் அல்லது 04362 – 226720, 227089, என்றதொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கோவைமணி (பொ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/