தஞ்சாவூர் செப்.23- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி கரும்பு சாகுபடியில் புதிய தொழில்நுட்பமாக இயந்திரப் பயன்பாடு குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மற்றும் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலையம் ஒரத்தநாடு வட்டம் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களும் இயந்திரப் பயன்பாடு என்ற தலைப்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
கண்காட்சியில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வேலாயுதம் கண்காட்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் தலைமை நிர்வாகி செல்வர் சுரபி துவக்கி வைத்து உரையாற்றினார்.
கருத்தரங்கில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து நவீன தொழில்நுட்பங்கள் உற்பத்தி செலவை குறைக்கும் முறைகள் கரும்பு மகசூல் அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை வேளாண் துறை வல்லுநர்கள் எடுத்துக் கூறினர்.
மேலும் கண்காட்சியில் இருபத்தி ஒரு அரங்கு அமைக்கப்பட்டு கரும்பு விவசாயிகளுக்கு தேவையான விவசாய இடுபொருள்கள் டிராக்டர் உழவு இயந்திரம் நவீன இயந்திரங்கள் கரும்பு நாற்றுகள் மற்றும் உரம் தெளிப்பதற்கு ஆள் இல்லா டிரோன் ஆகியவை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த கரும்பு அறுவடை பருவத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக கரும்பு அறுவடை அனுப்பிய 8, கரும்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கரும்பு அபிவிருத்தி அலுவலர் கிராம செய்திருந்தார்.
கண்காட்சியில் தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை செல்லக்கண்ணு ஞானதேசிகன் உதவி வேளாண்மை இயக்குனர் எஸ் . அய்யம்பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/