தஞ்சை ஏப்ரல் 16 தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் ராஜகோபால் (ஓய்வு) தலைமையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சஞ்சய் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த்துறை காவல்துறை இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வட்டார போக்குவரத்து அலுவலகம் பதிவு துறை ஆகிய துறை அலுவலர்கள் ஆய்வு மாநில தலைமை தகவல் ஆணையரால் நிலுவை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்கள் கோரியுள்ள தகவல்களை முழுமையாக உடன் அளித்திட அறிவுறுத்தினார், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரப்பெறும் மனுக்கள் தொடர்பாக உரிய கால வரையறைக்குள் மனுதாரர்களுக்கு தகவல்கள் வழங்கிடவும் நகல் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசுக்கு செலுத்த வேண்டிய நகல் மனு கட்டண விவரங்கள் தொடர்பான தலைப்பு மற்றும் கட்டண விவரங்களை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக அலுவலகம் பகுதியில் விளம்பர பலகையும் வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டம் துவங்குவதற்கு முன்பு மாநில தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால் (ஒய்வு) கையில் வேப்பிலையுடன் வந்தார் மேலும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வேப்பிலை தோரணம் தொங்கவிடப்பட்டிருந்தது மேலும் கூட்டத்தில் மேஜையில் வேப்பிலையை கொத்து வைக்கப்பட்டிருந்தன கொரோணா காரணமாக வேப்பிலை கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.