அரசு பள்ளிக்கூடங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார், தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம், என்றும் நேற்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மேலும் பள்ளி திறப்பு தற்போது இல்லை எனவும் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மருத்துவரின் கருத்துகளை கேட்டு பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.