மின்சார வாரியத்தில் உள்ள பராமரிப்பு பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து தஞ்சையில் மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் பணியாளர்கள் நிரப்பப்படுவது கண்டித்து தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர், தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப்போராட்டத்தில் தமிழக அரசு மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும், மின் வினியோகம் பிரிவில் தற்போது உள்ள காலி பணியிடங்களை நிரப்பவும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் குறைவான கூலிக்கு நியமிக்கப்படும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மின்வாரிய தொழிலாளர்கள் 80% மேல் போராட்டத்தில் பங்கேற்றதால் அலுவலக மற்றும் மின்வினியோகம் பணிகள் பாதிக்கப்பட்டன.