தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மின்சாரச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டம், பட்டுக்கோட்டை கோட்டத்தில், பட்டுக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலக நுழைவு வாயிலில் மதிய உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படாததால், அன்று நடத்த திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டமாக நடந்தது. மசோதா பாராளுமன்றத்தில் என்றைக்கு தாக்கல் செய்யப்படுகிறதோ, அன்றைய தினம் வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு அனைத்து மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. டெல்லியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற அனைத்து மாநில மின் ஊழியர்கள் மீது, டெல்லி காவல்துறை மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதில் சிஐடியூ மின் ஊழியர் சங்க வட்ட பொருளாளர் ஆரோக்கியசாமி, தொமுச திட்ட துணை தலைவர் கோபிநாதன், கோட்ட அமைப்பாளர் பால்ராஜ், தொழிலாளர் ஐக்கிய சங்கம் அமைப்பு செயலாளர் செல்வராஜ், பொறியாளர் சங்கம் திட்ட தலைவர் குமார், பொருளாளர் ஜெய்சங்கர், ஐஎன்டியுசி திட்டப் பொருளாளர் பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/