தஞ்சை மே 17: பூண்டி அய்யா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்கள் தனது 92ஆம் வயதில் இன்று மறைந்தார், கடந்த மே 11ஆம் தேதி அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பூண்டி அய்யா அவர்கள் 11 மே 1929-ல் பிறந்தார் அவர் தனது கல்லூரிக் கல்வியை லயோலா கல்வியில் பயின்றவர், அவர் தனது இளம் வயதிலிருந்து காங்கிரஸ் உறுப்பினராக இருந்தவர், மேலும் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் விளங்கியர், தஞ்சையின் பாராளுமன்ற உறுப்பினராகவும் தொண்டாற்றியவர்.

பூண்டி கிராமத்தில் 1956 ஆம் ஆண்டு அருள்மிகு வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி என்ற கல்லூரியை நிறுவினார். அந்த காலத்தில் தஞ்சையில் ‍ஒரே ஒரு அரசுக்கல்லூரியை தவிர கல்லூரி கல்வி நிறுவனங்கள் ஏதுமில்லை.

இவரால் ஆரம்பிக்கப்பட்ட அருள்மிகு வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி கல்லூரியில் பயின்று பலன் பெற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பல இலட்சங்களை தாண்டும்.

கணிணித் துறையை நிறுவி பல்லாயிரம் கிராமத்து மாணவர்கள் கணிணித்துறை பொறியாளர்களாக வெளிநாடுகளில் பணிபுரிவதற்கு இவரது ஸ்ரீ புட்பம் கல்லூரி கல்லூரியே முழு முதற்காரணம்.

கல்வி வள்ளல், பூண்டி அய்யா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்கள் தனது 92 ஆம் வயதில் மறைந்தது தஞ்சை மாவட்டத்திற்கு மட்டுமின்றி அவரால் கல்வி பயன் பெற்று உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு ‍பேரிழப்பாகும்.

செய்தி தஞ்சை டுடே நிருபர்.
தஞ்சை.