‍தஞ்சை மே 10 சென்னை ஊரடங்கு அறிவிப்பின் முதல் நாளான இன்று அதிமுக எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, அதன்படி இன்று பலத்த காவலர்களின் பாதுகாப்புடன் கூடியது, இதற்கு முன்பு கடந்த 7ஆம் தேதி கூடிய கூட்டமானது ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகளுக்கிடையே பெரிய வாக்குவாதம் நிலவியதால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று கூடிய கூட்டத்தில் வெற்றிப் பெற்ற அதிமுக எம்எல்ஏக்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் மூன்று மணி நேரம் எந்தவித முடிவையும் எட்டாமல் நடந்துள்ளது.

ஒ.பி.எஸ் தானும் இல்லாமல், இ.பி.எஸ் அவர்களும் இல்லாமல் தனபாலை எதிர்கட்சி தலைவராக்கலாம் என கூறியதற்கு இ.பி.எஸ் தரப்பு ஒத்துக் கொள்ளவில்லையாம், பின்னர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஒ.பி.எஸ் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் இ.பி.எஸ் எதிர்க்கட்சி தலைவராக ‍தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த முடிவில் பெரும் அதிருப்தி அடைந்த ஒ.பி.எஸ் கூட்டத்தின் பாதியில் ‍வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஜேபி கைவிட்டதா?

இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் இருவருக்குள் எற்படும் சங்கடங்களை பி.ஜேபி உள்ளே நுழைந்து தீர்த்து வைத்துள்ளது, இந்தச் சூழலில் ஒ.பி.எஸ் இந்த எதிர்க்கட்சி விவகாரத்தில் பி.ஜே.பி தலையிட்டு தனக்கு வாங்கித்தரும் என்ற நம்பிக்கையில் ஒ.பி.எஸ் இருந்ததாக சிலர் பேசுகின்றனர்.

ஆனால் ஆட்சி நான்காண்டுகள் கடத்தி அதில் தான் நினைப்பதை சாதித்து கொள்ளவே பி.ஜே.பி இவர்கள் இருவருக்கும் நண்பர்கள் போல செயல்பட்டது, இப்போது ஆட்சி அதிமுகவின் கையை விட்டு போனதால் இதைப்பற்றி கவலைப்பட வில்லை என்று சிலரும், எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அதரித்து அஇஅதிமுகவை ஒரு சாதி கட்சியாக மாற்றி அதனை பி.ஜே.பி தன் வசப்படுத்திக் கொள்ள அது உள்ளே இருந்து எடப்பாடி பழனிச்சாமியை அதரிப்பதாக சிலரும் கூறுகின்றனர்.

எதுவானாலும் இன்றைக்கு அதிக எம்.எல்.ஏக்களை தன் வசம் வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவராகிறார். ஒ.பி.எஸ் அதிகமாக பி.ஜே.பி யின் ஆலோசனையில் தான் தனது அரசியல் காய்களை நகர்த்தினார், ஆனால் அவர்கள் தான் இவரை முதுகில் குத்தி விட்டனர் என்று அவரது தொண்டர்கள் நினைக்கின்றனர்.

செய்தி தஞ்சை டுடே தலைமை நிருபர்.