தஞ்சை ஏப்ரல் 11 தஞ்சை மாவட்டம் பூதலூர் பேருந்து நிலையம் ஸ்ரீகாம்ப்ளக்சில் யாழ்தேவி இணையவழி சேவை நிலையம் தொடக்க விழா நடந்தது.

யாழ்தேவி இணைய வழி சேவை நிலையம் தொடக்க விழாவிற்கு பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ.ராஜ்குமார் தலைமை வகித்தார். மக்கள் உரிமை கூட்டமைப்பு துணை செயலாளர் வீரசிங்கம் முன்னிலை வகித்தார். யாழ்தேவி இணையவழி சேவை நிலையத்தை பேரிசை யாழினி திறந்து வைத்தார்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள யாழ்தேவி இணையவழி சேவை நிலையத்தில் ஆன்லைன் ஷாப்பிங், மினி ஏடிஎம், வங்கி சேவைகள், அனைத்து வகையான இன்சூரன்ஸ், லோன் மற்றும் பைனான்ஸ் சேவை, எல்ஐசி பிரீமியம் கட்டுதல், பணம் பரிமாற்றம், டிடிஎச், மொபைல் ரீசார்ஜ், போன் மற்றும் கரண்ட் பில் கட்டுதல், பஸ், ரயில், விமான டிக்கெட் உட்பட பல்வேறு சேவைகள் செய்து தரப்படுகிறது.

விழாவில் கலியபெருமாள் வரவேற்புரையாற்றினார். மாசிலாமணி, தமிழன் காமராஜ் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பிற வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ஒன்பத்துவேலி கண்ணன் நன்றியுரையாற்றினார். விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நிலைய உரிமையாளர் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி ஆசிரியை ப்ரீத்தி ஆகியோர் நன்றிகள் தெரிவித்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
தஞ்சை.