தஞ்சாவூர்: கொரோனா அதிகரிப்பால் தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தஞ்சை ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து முக்கிய பகுதிகளும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேல வஸ்தாசாவடி, சிந்தாமணி குடியிருப்பு மற்றும் பிள்ளையார்பட்டி முக்கிய வீதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பிள்ளையார்பட்டியின் ஊராட்சி சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது. ஊராட்சித் தலைவர் உதயகுமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்