தஞ்சை மாவட்ட உழவர்கள் பயன் பெறும் வகையில், சொட்டு நீர் மற்றும் ‍தெளிப்பு நீர் பாசன மேளாண்மைக்கு சிறு மற்றும் குறு நில உழவர்களுக்கு 100 சதவீதமும், ஏனைய உழவர்களுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கி ஊக்கப்படுத்தப்படும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் மழைப் பெய்து வயல் வெளிகள் முழ்கி இருக்கும் நேரத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனத்திற்கு மானியமா? என்ற கேள்வி எழலாம்.

தஞ்சை மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம் இல்லாத மழைக்குறைவான பகுதிகளுக்கு இந்த சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் மிகுந்த பலன் தரலாம்.

‍செய்தி & காட்சிகள் ம.செந்தில்குமார்