தஞ்சாவூர்,பிப்.5- மகாத்மா காந்தி நினைவு நாளில் கோட்சே பெயரைக் கூற தடை விதித்தும், குவாலியரில் கோட்சே- ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருது வழங்குவோம் என அறிவித்தவர்களை கண்டித்தும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்டத் தலைவர் அமர்சிங் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். மாநகரத் தலைவர் நரேந்திரன், தெற்கு ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர் ராமலிங்கம், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் ஜவஹர் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில திராவிடர் கழக அமைப்பாளர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் நீலமேகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன. இதில் திராவிடர் கழக மண்டல தலைவர் அய்யனார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாவூதீன், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் சொக்கா ரவி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட துணை செயலாளர் துரை மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/