தஞ்சாவூர் நவ :10- தஞ்சை மாநகராட்சி பகுதியில் வட கிழக்கு பருவமழையும் அனைத்து மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கடந்த ஒரு மாதங்களாக தூர்வாரப்பட்டு வருகிறது இதுவரை 23. 01.கி.மீ. தூரத்திற்கு வடிகால் தூர்வாரப்பட்டு உள்ளது.

தொடர்ந்து தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது மழைகாலங்களில் தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜசோழன் சிலை பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் ராஜா மிராசுதார் மருத்துவமனை சாலை வழியாக கீழவாசல் மார்க்கெட் அண்ணாசாலை வழியாக சென்று தியேட்டர் அருகில் உள்ள வாய்க்காலில் சேர்ந்து அகழியை சென்றடையும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் நாளடைவில் அண்ணாசாலை மழைநீர் வடிகால் மீது கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டது செய்யப்பட்டதால் மழைகாலங்களில் ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரி சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வந்த நிலையில் மழைநீர் வடிகால் மீது அமைக்கப்பட்ட கடை கட்டிடங்களை அப்புறப்படுத்தி கொள்ள கடைக்காரர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது.

கடைகளுக்கு பெயரில் எழுப்பப்பட்டிருந்த கேட் பிணையை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தீபாவளி பண்டிகை முடிந்த பின் கடைகளை காலி செய்வதாக உறுதி அளித்திருந்தனர். அதன்படி கடைகளை காலி செய்யும்படி மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினர் அதற்கு வியாபாரிகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதற்கு மாநகராட்சி அலுவலர்கள் மறுத்து விட்டனர் அதன்படி பொக்லின் எந்திரம் மூலம் அகற்ற முயன்றனர். வியாபாரி எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது பெய்து வரும் பெரும் மழையை நினைத்து மாநகரில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டு வருகிறது.

அண்ணா சாலையில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பெரிய கடைகளில் மின் இணைப்பு துண்டிப்பு செய்ய மின்சார வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இணைப்பு துண்டிப்பு செய்தவுடன் மழைநீர் வடிகால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/