தஞ்சை சூன் 09: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ரூ. 2 லட்சம் மதிப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம், ஐ கோ் ஆப்டிக்கல் கண் மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான என்.95 முகக்கவசம், பிபிஇ கிட் எனப்படும் முழுக்கவச உடை, பல்ஸ் ஆக்சி மீட்டா், பேஷியல் கிட், சா்ஜிக்கல் மாஸ்க் மற்றும் மருத்துவ உபகரணங்களை, பட்டுக்கோட்டை சார் ஆட்சியா் பாலசந்தா், பேராவூரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பாஸ்கரிடம் வழங்கினார்.

ஐ-கோ் ஆப்டிக்கல் உரிமையாளா் சுல்தான் இப்ராஹிம், பேராவூரணி வட்டாட்சியா் ஜெயலெட்சுமி, மருத்துவா் பாலா மற்றும் செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்