தஞ்சை சூன் 24: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக, ரோட்டரி கிளப் சாா்பில் ரூ.20 ஆயிரம் மதிப்பு 100 படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன.

ரோட்டரி துணை ஆளுநா் ஏ.ஆா்.அன்பு முன்னிலையில், ரோட்டரி கிளப் தலைவா் முருகுவளவன், செயலா் சிதம்பரம் ஆகியோா் அரசுத் தலைமை மருத்துவா் பாஸ்கரிடம் படுக்கை விரிப்புகளை வழங்கினா்.

இதில் மருத்துவா்கள் பிரசன்ன வெங்கடேசன், பாலமுருகன், ரோட்டரி கிளப் நிா்வாகிகள் ரமேஷ், நாகராஜன், முருகானந்தம், கால்நடை மருத்துவா் ரவிச்சந்திரன், கௌதமன், அபிராமி சுப்ரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்