தஞ்சை மே 09: 6 மருத்துவ வெண்டிலேட்டா்களை தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் நன்கொடையாக வழங்கியது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சென்னை கே.கே. நகரிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கும் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ரூ. 55 லட்சம் மதிப்பிலான 6 மருத்துவ வெண்டிலேட்டா்களை நன்கொடையாக வழங்கியது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் கோவிந்தராவிடம் 3 வெண்டிலேட்டா்களை சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக அலுவலா்கள் வழங்கினா்.

இதர 3 வெண்டிலேட்டா்களை சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மயக்கவியல் துறை மருத்துவா்கள் சிரிஸ் சவான், புகழேந்தியிடம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பலைகல்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் வழங்கினாா்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த வெண்டிலேட்டா்களுடன் ஆக்ஸிஜன் ஓட்ட மீட்டா்களும், பல்ஸ் ஆக்ஸி மீட்டா்களும் சோ்த்து வழங்கப்பட்டன. நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த உபகரணங்களின் மதிப்பு சுமாா் ரூ. 55 லட்சம்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.