இந்திய ஒன்றிய அரசின் பல சட்டங்களில் புதிதாக வந்துள்ள சட்டம் மனித உயிர்களை தனிப்பட்ட முறையில் குறி வைப்பதாக உள்ளது, அதாவது இனிமேல் அறுவை சிகிச்சைகளை ஆயூர்வேத மருத்துவர்களும் அலோபதி மருத்துவர்களுடன் சேர்ந்து செய்யலாம் எனக்கூறியுள்ளது.
அலோபதி மருத்துவம் நவின அறிவியல் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வரும் மருத்தவமாகும், ஆயுர் வேதிக் என்பது எந்த வித அறிவியல் வளர்ச்சியும் இன்றி பழைய முறைகளை அப்படி பின்பற்றுவதோடு அதில் மத நம்பிக்கைகளுக்கு மிகுந்த இடமுண்டு, அலோபதியில் நோயாளியோ, மருத்துவரோ மத நம்பிக்கையுடன் இருந்தாலும், மருத்துவ முறை மத நம்பிக்கையற்ற அறிவியல் பூர்வமானது.
எனவே மத்திய அரசு அறிவித்துள்ள ஆயுர்வேத மருத்துவர்களும் அலோபதி முறையில் அறுவை சிகிச்சை செய்யலாம் என்பதை எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்தும், இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தஞ்சை மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தனியார் மருத்துவமனையில் மற்றும் கிளினிக்கில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை அவசர தேவையை தவிர இதர சேவைகள் செயல்படவில்லை. இந்த இந்திய ஒன்றிய அரசின் அறிக்கை நோயாளிகளுக்கு பெரிய தீங்கினை விளைவிக்க கூடியதாக அமையும்.