உலகின் மிக குறைந்த எடைக்கொண்ட சாட்டிலைட்டை உருவாக்கிய தஞ்சையைச் சேர்ந்த கல்லூரி மாணவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டி வாழ்த்து.. சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் நேரில் மாணவனின் வீட்டிற்க்கு சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்…


தஞ்சையைச் சேர்ந்த ரியாஸ்தீன் என்கிற 18வயது மாணவர் கண்டுபிடித்துள்ள உலகிலேயே மிகவும் எடைக் குறைவான இரண்டு சாட்டிலைட் அமெரிக்காவில் உள்ள நாசாவிலிருந்து 2021ல் விண்ணில் ஏவப்படவுள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த I DOOLE LEARNING நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து cubes in Space என்று புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது. இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 73 நாடுகளிலிருந்து கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்டுபிடிப்புகளிலிருந்து தஞ்சையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரியாஸ்தீன் கண்டுபிடிப்பான சாட்டிலைட் விண்ணில் ஏவுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது..


Vision Sat-VI மற்றும் ஏ2 என்று பெயரிடப்பட்டுள்ள இரு சாட்டிலைட்டுகளும் உயரம் 37 மி.;மீ மற்றும் 32 கிராம் எடையுடையது. இரு சாட்டிலைட்டுகளும் உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோளாகும்.இரு சாட்டிலைட்டுகளும் தொழில் நுட்ப சோதனை செயற்கைக் கோள்கள். இரு சாட்டிலைட்டுகளிலும் 11 சென்சார்கள் ணஉள்ளன. அதன் மூலம் 17 Parameter கண்டறிய முடியும்..


இச்சாதனையை செய்த மாணவர் ரியாஸ்தீனுக்கு பாராட்டுகள் குவியும் நிலையில் இன்று தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் மாணவர் ரியாஸ்தீன் வீட்டிற்க்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்தினர்.. அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு மாணவர் ரியாஸ்தீனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்…


இதுகுறித்து பேட்டி அளித்த மாணவர் ரியாஸ்தீன் திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.. இது எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது என்றார்..
இந்நிகழ்ச்சியின் போது மாணவரின் பெற்றோர் மற்றும் பூதலூர் ஒன்றிய திமுக செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்..

க – சசிகுமார், நிருபர்
தஞ்சாவூர்,