தஞ்சை மே: 14, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் எம்பி பழனிமாணிக்கம், திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன், தஞ்சை எம்எல்ஏ நீலமேகம், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆட்சியர் கோவிந்தராவ் உடன் இருந்தார்.

அப்போது பழனிமாணிக்கம் எம்பி நிருபர்களிடம் கூறும்போது, சோழமண்டலம் முழுவதற்கும் தஞ்சை என்பது தாய்வீடு போன்றது, எனவே மற்ற மாவட்டங்களில் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாநில அரசுக்கு தெரிவிக்கப்படும் தடுப்பூசி பெரும்பாலோனோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இனியும் தேவைப்படுவோருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் இருப்பு உள்ளது என்றார், எம்எல்ஏ துரை சந்திரசேகரன் கூறும்போது தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய வசதிகள் உள்ளன.

மேலும் இங்கு நோயாளிகள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் அதுமட்டுமன்றி பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களையும் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும் உரிய ஏற்பாடுகளை செய்து சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது இல்லை என்றார், முன்னதாக நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு உள்ள நபர்களின் எண்ணிக்கை எத்தனை நாட்களில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஆக்சிசன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் எஸ் பி தேஷ்முக் சேகர் சஞ்சய், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், ஆர்டிஓ வேலுமணி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், முனைவர் மருதுதுரை, நிலைய மருத்துவர் செல்வம், தாசில்தார் பாலசுப்பிரமணியன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை