தஞ்சை மார்ச் 19 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8. தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள துரை சந்திரசேகரன் திருவையாறு, டி.கே.ஜி நீலமேகம் தஞ்சாவூர், எம் ஆர் ராமச்சந்திரன் ஒரத்தநாடு, அண்ணாதுரை பட்டுக்கோட்டை, அசோக்குமார் பேராவூரணி, கோவி செழியன் திருவிடைமருதூர், சாக்கோட்டை அன்பழகன் கும்பகோணம், ஜவாஹிருல்லா பாபநாசம்,தஞ்சை மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரித்து செய்த தேர்தல் பிரச்சாரத்தில் ஒரத்தநாடு அண்ணா சிலையில் உதயசூரியன் சின்னத்திற்கு தானும் ஒரு வேட்பாளராக வருகை தந்துள்ளேன், என மற்றும் தஞ்சை மாவட்ட தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.