தஞ்சை மார்ச் 17 தஞ்சை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் இன்று தஞ்சை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், வாக்காளர்கள் டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் திமுக தொண்டர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தஞ்சை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் T.K.G.நீலமேகம் இன்று தொகுதிக்குட்பட்ட 2 வது வார்டு வேலூர், தட்டாங்குளம், வலம்புரி, பூக்குளம், குருவிக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்,
பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பேசிய வேட்பாளர் நீலமேகம் பின்வருமாறு பேசினார்.

பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து கேஸ் சிலிண்டருக்கு 100 மானியம், நகர பேருந்துகளில் இலவச பயணம், மாதம் 1000 உரிமைத்தொகை, கொரோனா உதவித்தொகை 4000 உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் , விவசாயிகளுக்கு நெல், கரும்புக்கு கூடுதல் விலை என திமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்தும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதியினை அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.