தஞ்சை மே 25: தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன் திடீர் என்று வருகை தந்து திருவையாறில் உள்ள மெடிக்கல் ஷாப்புகளில் ஆய்வு செய்தார்.

தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அறிவித்து நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் அரசு விதிமுறைப்படியும், கொரோனா தொற்று விதிமுறையை பின்பற்றியும் மருந்தகங்கள் செயல்படுகிறதா என்பது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன் ஆய்வு செய்தார்.

திருவையாறு பகுதியில் உள்ள மருந்தகங்களில் விற்கப்படும் மருந்து, மாத்திரைகளை எடுத்து பார்த்து உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை பார்வையிட்டு லைசென்ஸ் புதிப்பிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார் அரசு விதிமுறையை சரியாக கடைபிடிக்காத மெடிக்கல் ஷாப்புகளுக்கு அபராதம் விதித்தார்.

தொடர்ந்து திருவையாறு கடைவீதியில் தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை பிடித்து அறிவுரை வழங்கி அவர்களுக்கும் அபராதம் விதித்தார். மேலும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. ஆய்வின்போது தாசில்தார் நெடுஞ்செழியன், வருவாய் ஆய்வாளர்கள் சாந்தி, மஞ்சு, சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்