தஞ்சாவூர் பிப்.4- தஞ்சாவூர் மாவட்டம், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தொடர்பாக கும்பகோணம் மாநகராட்சி மற்றும் திருப்பனந்தாள் பேரூராட்சியில் தேர்தல் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மனுத்தாக்கல் செய்ய நாளை 4ஆம் தேதி கடைசி நாளாகும். கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் 48 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் மொத்தம் 139 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இதில் 1,28,540 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் 55 வாக்கு சாவடிகள் பதட்டமான வாக்கு சாவடிகள் ஆகும். வாக்கு சாவடிகள் மற்றும் கும்பகோணம் மாநகராட்சி தேர்தலுக்கான கும்பகோணம் அரசு தன்னாட்சி பெற்ற ஆடவர் கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து திருப்பனந்தாள் பேரூராட்சியில் மொத்தம் 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, இதில் 8894 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதில், மட்டியூர் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் பட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையம் மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கான கும்பகோணம் லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட வாக்கு சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாக்குசாவடி மையங்களில் மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்தளம் வசதிகள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

முன்னதாக, திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் வீராக்கண்-கூத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் வீராக்கண்-பரவானூர் அரசு உதவி பெறும் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்தும், பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பு குறி கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது. கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் குமார். கோட்டாட்சியர் லதா. திருப்பனந்தாள் பேரூராட்சி செயல் அலுவலர் வருவாய் ராஜதுரை, திருவிடைமருதூர் வட்டாட்சியர் சந்தனவேலு, கும்பகோணம் வட்டாட்சியர் தங்க பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/