தஞ்சாவூர் நவ: 6- தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சியில் சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலையம் சாலை பகுதியில் ராஜா நகர் வார்டு 7 மற்றும் 8, ஆசாத் நகர், தரகர் தெரு 9 மற்றும் 10வது வார்டு ஆகியவற்றில் சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் சிறப்பு தூய்மைப் பணியாளர்கள் மூலம் வடிகால் கால்வாய் தூர்வாரும் பணிகளை குடிநீர் வசதிகள் தெருவிளக்குகள் போன்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டார் தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேராவூரணி தாலுக்கா ராஜாமடம் ஊராட்சி கீழத்தோட்டம் கிராமத்தில் கடற்கரையின் முகப்புப் பகுதியில் மழைநீர் கடலுடன் கலக்கும் முகத்துவாரம் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதேபோன்று பூக்கொல்லை கிராமம் வழியாக இரட்டை வயல் கிராமத்தை இணைக்கும் பூனைக்குத்தி ஆற்றுப் பாலத்தின் மீது மழை நீர் வெள்ளம் செல்வதை பார்வையிட்டார்.

தொடர்ந்து மழை காலங்களில் பேரிடர் பாதுகாப்பு உபகரணங்கள் மணல் மூட்டைகள் மற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார் ஆய்வின்போது பட்டுக்கோட்டை ஆர்டிஓ பிரபாகர் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் அக்னி அறுவடை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கனிமொழி உதவி செயற்பொறியாளர்கள் அருண் கனேஷ் கோவிந்தராஜன் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/