தஞ்சாவூர் ஆக 25 தஞ்சை அருகே மருங்குளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் தோட்டக்கலைத்துறை பண்ணையை மாவட்ட கலெக்டர் பொன்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, தஞ்சை அருகே மருங்குளம் ஊராட்சி 10. 70 ஏக்கர் பரப்பளவில் அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது இங்கு தாய் செடிகள் 5 எக்டேரும், பல தோட்டங்கள் 2 எக்டேர் நர்சரி மற்றும் இதர பகுதிகளில் 2.70 ஏக்கர் பரப்பளவில் உள்ளது, இப் பண்ணையில் மா, முந்திரி, கொய்யா, நெல்லி, சப்போட்டா, பலா போன்ற ஒட்டுக்கன்னுகளும், கொய்யா பதியன்கள் மரக்கன்றுகள் அலங்காரச் செடிகள் மூலிகைச் செடிகள் குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்படும்.

காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டும், காய்கறி, நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டும் பொதுமக்களுக்கு நேரடி விற்பனை மற்றும் தோட்டக்கலைத்துறை செயற்படுத்தும் திட்டங்களில் விவசாயிகளுக்கு கன்றுகளாகவும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது மேலும் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் புதிதாக பண்ணை சுற்றுலாவிற்காக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அவற்றை வீட்டு காய்கறி தோட்டம், மற்றும் மாடி தோட்டம் போன்றவைகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாவிற்காக வருகை தருவோர் நுழைவு கட்டணம் செலுத்தி பண்ணையில் நடைபெறும் ஒட்டுக்கட்டுதல் வகைகள் போன்றவற்றை செய்முறை விளக்கத்தையும் மற்றும் வீட்டு காய்கறித் தோட்டம், மாடி தோட்டம், ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தையும் பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திட்டமிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார் ஆய்வின்போது தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் உள்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/