தஞ்சாவூர் ஆக 19: தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய பணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், வேளாண்மை உதவி இயக்குனர் அய்யம்பெருமாள், உதவி வேளாண்மை அலுவலர்கள் பேட்டரி இளையராஜா, ஞானசுந்தரி ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேஷ், சாந்திசாமி, வடிவழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதேபோல் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் கல்விராயன்பேட்டை ஊராட்சியில் மாதா கோவில் தெருவில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 48 ஆயிரத்து 798 மதிப்பில் பழுது நீக்கம் செய்யப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் ,தனிநபர் குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/