தஞ்சை மார்ச் 18 தஞ்சைபுதிய பேருந்து நிலையம் பகுதியில் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அங்கிருந்த பொதுமக்கள் பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் அன்பழகன் கும்பகோணம் பகுதி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் தஞ்சை மாரகராட்சி ஆணையர் திருமதி ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட பலர் இந்த விழிப்புணர்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் அப்பகுதியில் நின்றிருந்த பயணிகள் வாகனம் ஆட்டோ கார் போன்ற வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது, தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சை மாவட்ட நிர்வாகம்
தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை