தஞ்சாவூர் செப்: 5- தஞ்சையை அடுத்த திருமலை சமுத்திரத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஏற்பாட்டின் பேரில் 130 வகையான மரக்கன்றுகளுடன் “மரங்கள் சரணாலயம்” உருவாகி வருகிறது விரைவில் இதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது.
தஞ்சை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றபின் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தான் பதவியேற்ற நாள் முதல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் தனது தலையாய பணியாக மாவட்டத்தின் கொரோனா தொற்றை அடியோடு குறைப்பதற்காக மிகத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார் இதற்காக அவர் தானே நேரடியாக களத்தில் இறங்கி செயலாற்றி வருகிறார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் அந்த பகுதிகளில் பொதுமக்கள் யாரேனும் முக கவசம் அணியாமல் செல்கிறார்களா என்பதை கண்காணித்து அவர்களை முக கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறார்.
அத்துடன் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் வணிக நிறுவனங்களின் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து வருகிறார். அத்துடன் பேருந்துகளில் ஏறி பயணிகள் முக கவசம் அணியாமல் செல்கிறார்களா என்பது குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இது ஒருபுறம் என்றால் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிலைகளிலும் சிறப்பான இடத்திற்கு கொண்டுவருவதற்காக பல்வேறு வழிகளிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறார், பல்வேறு திட்டங்களை அவர் தனது கைவசம் வைத்து செயலாற்றி வருகிறார்.
அதில் ஒரு கட்டமாக தஞ்சையை அடுத்த திருமலை சமுத்திரத்தில் விருட்ச வனம் எனும் மரங்கள் சரணாலயத்தை அமைத்து வருகிறார். இதற்காக 5 ஏக்கர் நிலப் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த பகுதி முழுவதும் கம்பி முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 130 வகையான மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மரங்களின் பெயர் குறித்து மாணவ மாணவிகள் மற்றும் பார்வையாளர்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் ஒவ்வொரு மரதத்தின் பெயரும் அதன் அருகில் வைக்கப்பட உள்ளது. இந்த சரணாலயத்தில் அமைக்கப்படும் மரக்கன்றுகளை பராமரிப்பதற்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இது தவிர இங்கே நடப்பட்ட உள்ள மரக்கன்றுகளை பராமரிக்க சொட்டுநீர் பாசனம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஊரக வேலைத் திட்ட பணியாளர்கள் கொண்டு இந்த மரங்களை பராமரிக்க திட்டமிட்டுள்ளது வளங்களை பாதுகாப்பது மட்டுமல்லாது பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் நமது மண் வளம் மற்றும் இயற்கை வளங்கள் மரங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் இந்த விருட்ச வனம் உருவாகி வருகிறது.
மாணவ மாணவிகள் மட்டுமல்லாது வருங்கால சந்ததியினரும் நமது இயற்கை வளங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த சரணாலயம் உருவாகி வருகிறது இதுபோன்ற “மரங்கள் சரணாலயம்” அமைக்கப்படுவதன் மூலம் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை தவிர்க்கப்படுவதுடன் சுகாதாரமான காற்றும் கிடைப்பதற்கும் ஏதுவாக அமையும் என்பதில் எந்த சந்தேகமில்லை கலெக்டரின் இந்த சிறப்பான முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/