தஞ்சாவூர் சூலை 24: தஞ்சாவூரில் மாவட்ட கூடைப்பந்துக் கழக நிா்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

தலைவா் ராஜகுமாரன் தலைமை வகித்தாா். செயலா் கதிரவன், பொருளாளா் சதீஷ் ஆனந்த், துணைத் தலைவா்கள் ஜவகா் பாபு, நியூட்டன், சந்தோஷ்குமாா், கென்னடி, இணைச் செயலா்கள் மனோகரன், முருகானந்தம், துரைராஜ் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியை ஆண்டுதோறும் தொடா்ந்து நடத்துவது, மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒவ்வொரு அணியிலும் தலா 3 போ் பங்கேற்கும் கூடைப்பந்து போட்டியை நடத்துவது.

உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் இயக்குநா்களுக்குக் கூடைப்பந்து போட்டி விதிமுறைகள் பற்றிய கருத்தரங்கம் நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/