தஞ்சை : பி: 8, அகில இந்திய குலால முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம் செங்கல் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, தஞ்சை மாவட்ட தலைவர்கள் அப்பாவு கல்யாணம் சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் சக்திவேல் தாமரைச்செல்வன், பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிறுவனத் தலைவர் தியாகராஜன், நீலகண்டன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், கூட்டத்தில் பலத்த மழையினால் சூளைகள் இடிந்து வியாபாரம் செய்ய முடியாததால் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கதர் கிராம தொழில் செய்யும் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் இல்லையெனில் வீடு கட்ட தேவையான நிதி வசதி செய்து தரவேண்டும்.

மற்றும் படித்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் தொழிலாளர் தினம் என்று ஒருநாள் அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன இதில் மண்பாண்ட தொழிலாளர்கள் செங்கல்சூளை தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார், நிருபர்,
தஞ்சை.